தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/உண்மையைப் பின்பற்றுங்கள்

உண்மையைப் பின்பற்றுங்கள்

உண்மையைப் பின்பற்றுங்கள்


ADDED : மே 31, 2012 11:05 AM

Google News

ADDED : மே 31, 2012 11:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அடக்கப்படாத மனமும், தீயநெறியில் செல்லும் குணமும் நம்மை எப்போதும் கீழ்நோக்கியே இழுக்கும். ஆனால், அடங்கிய மனம் நமக்கு விடுதலை அளிக்கும்.

* உலக நன்மைக்காக உங்களிடம் உள்ள அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராய் இருங்கள்.

* கள்ளம் கபடம் இல்லாத ஒழுக்கமுள்ள நாத்திகன், வஞ்சகனைக் காட்டிலும் சிறந்தவன்.

* இதயம் பரந்து விரிந்திருந்தால் மட்டுமே ஒருவனிடம் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானத்தால் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் வந்துவிடும்.

* மனத்தூய்மை உடையவனே கடவுளுக்கு மிக நெருங்கியவன்.

* யாருடைய மனம் ஏழை மக்களுக்காகத் துன்பத்தில் வருந்துமோ, அவரே மகாத்மா.

* இந்த மண்ணில் பிறப்பு எடுத்திருக்கும் நீங்கள், அதற்கு அடையாளமாக ஏதாவது ஒரு நல்ல பதிவை விட்டுச்செல்லுங்கள்.

* உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதையே பின்பற்றிச் செல்லுங்கள். கபடதாரியாகவோ, கோழையாகவோ இருப்பதால் பயனில்லை.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us